கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
மலேசியாவிற்கான வரி விகிதத்தை 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாகக் குறைத்து இருக்கும் அமெரிக்காவின் வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அமலுக்கு வருவதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு அப்துல் அஸிஸ் ஸாஃப்ருல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மலேசியப் பொருட்களுக்கு 19 விழுக்காடு வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
மலேசியாவிற்கு விதிக்கப்பட்ட வரி, 25 விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடாக அமெரிக்கா குறைத்து இருப்பது, இரு தரப்பினருக்கும் கிடைக்கப் பெற்ற வெற்றியாகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெங்கு அப்துல் அஸிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.








