அலோர் ஸ்டார், அக்டோபர்.16-
மாணவி ஒருவரைக் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அக்காணொளியை இணையத்தில் பகிர்ந்ததாக நம்பப்படும் நான்கு சிறார்களைக் கெடா போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பள்ளியின் வகுப்பறைகளில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தனது மகளின் நிர்வாணக் காணொளி இணையத்தில் பரவி வருவதாக தந்தை ஒருவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் அஹ்மாட் சலிமி மாட் அலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதே பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 375B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.








