சுங்கை சிப்புட், செப்டம்பர்.28-
ஒருபுறம் தொழில் துறையில் வளர்ச்சி கண்டாலும், விவசாயத்தை பேரா மாநிலம் ஒரு போதும் புறக்கணிக்காது என்று அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் உறுதிப்படுத்தியுள்ளார். மாநில மக்களுக்குப் போதுமான உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் துறையும் விவசாயத் துறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.
விவசாயிகளின் முக்கியப் பிரச்சனைகளான நிலச்சரிவு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றைத் தீர்க்க மாநில அரசு முக்கியப் பங்காற்றி வருகிறது. அத்துடன், Perak Agrofest 2025 நிகழ்ச்சிக்கு 250, ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதோடு, 4 மில்லியன் ரிங்கிட் விற்பனை இலக்கு எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








