கடந்த சனிக்கிழமை, ஹரி ராயா பெருநாள் அன்று, மாலை 6.45 மணியளவில் தமது வீட்டிற்கு அருகில் உள்ள சாலையில், மோட்டார் சைக்கிள்களை முறுக்கியவாறு, அராஜகத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் மாட் ரெம்பேட் கும்பலை விரட்டுவதற்கு நபர் ஒருவர் இரண்டு கைத்தடிகளுடன் களத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, கெமாமான் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கோலா திரெங்கானு-குவாந்தான் சாலையில், கெலிகா என்ற இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.
26 விநாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொளியைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


