Dec 10, 2025
Thisaigal NewsYouTube
மூன்று கேள்விகளுக்கு புக்கிட் அமான் பதில் சொல்லவில்லை: வழக்கறிஞர் ராஜேஸ் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

மூன்று கேள்விகளுக்கு புக்கிட் அமான் பதில் சொல்லவில்லை: வழக்கறிஞர் ராஜேஸ் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இன்று காலையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் எழுப்பிய மூன்று கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தில் போலீஸ் படை துணை கமிஷனர் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மானை சந்தித்தாக ராஜேஸ் குறிப்பிட்டார்.

இதில் முன்மையான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்புக் குழுவினர், இவ்வழக்கை குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டாக ஏன் பதிவுச் செய்யப்படவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்று ராஜேஸ் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எந்ததெந்த போலீஸ்காரர்கள் சம்பந்தபபட்டுள்ளனர், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்களா? என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை என்று ராஜேஸ் குறிப்பிட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிறப்பு போலீஸ் குழுவினர் யார்? அதற்கு தலைமையேற்ற முதிர் நிலை உதவி கமிஷனர் பெயர் என்ன வினவப்பட்ட போது, அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்று ராஜேஸ் தெரிவித்தார்.

Related News