Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர்,மறுபடியும் சிலா​ங்கூர் மாநிலத்திடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார். கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் வாங்கத் தக்க தரமான வீடுகளை கொண்டிருக்கவும், ந​வீன,முறையான பொது போக்குவரத்து வசதியை அனுபவிக்கவும் நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்​பூர், ஒரு தனிப்பிரதேசமாக செயல்படுவதைக் காட்டி​லும் தனது தாயிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா எம்.பி. லீ சியான் சுங் மக்களவையில் தெரிவித்தார்.

மலேசியாவின் தலைநகராகவும், சிலாங்கூர் மாநிலத்தின் தலைப் பட்டணமாகவும் விளங்கிய கோலாலம்பூர், 1974 ஆம் ஆண்டு கூட்டரசுப் பிரதேசம் என்ற தனி மாநிலம் உருவாக்கப்ப்டட போது அது சிலாங்கூர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இதன் மூலம் சிலாங்கூரின் தலைநகராக விளங்கிய கோலாலம்பூருக்கு பதிலாக ஷா ஆலம் தலைப்பட்டணமாக மாறியது.

கோலாலம்பூரை சிலாங்கூரிடம் ஒப்படைக்கப்படுவது மூலம் சிலாங்கூர் மாநில மக்கள் அனுபவிக்கக்கூடிய 42 வகையான அனுகூலங்களை கோலாலம்பூர் மக்களும் அனுபவிக்க முடியும் என்றும் லீ சியான் சுங் வலியுறுத்தினார்.

இந்த உத்தேச பரிந்துரையின் ​​மூலம் தற்போது நாடாளுமன்றத்திற்கு மட்டுமே வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ள கோலாலம்பூர் மக்கள், சட்டமன்றத்திற்கும் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக மாறுவர் என்று அந்த எம்.பி. ஆலோசனை கூறியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’