May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இராணுவ வீரர் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் இராணுவ வீரர் பலி

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 379 கிலோ மீட்டரில் சிலீம் ரீவருக்கு அருகில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அந்த இராணுவ வீரரின் உடல் சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லபட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.14 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் அரச மலேசிய போலீஸ் படைக்கு சொந்தமான Isuzu ரக லோரி, ஒரு நிசான் அல்மேரா கார் மற்றும் ஒரு யமஹா மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 28 வயது ஹபீஸ் யூசுப் என்ற இராணுவ வீரர் பயணித்த மோட்டார் சைக்கிள், சாலையோரத்தில் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியின் பின்புறம் மோதி தூக்கி எறியப்பட்டதாக முகமது ஹஸ்னி குறிப்பிட்டார்.

Related News