சுங்கை பட்டாணி, அக்டோபர்.01-
ஆடவர் ஒருவரைப் பாராங்கினால் தாக்கிக் காயம் விளைவித்ததாக மளிகை கடை உதவியாளர் ஒருவர் சுங்கை பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
23 வயது ஏ. சூரியவர்மன் என்று அந்த உதவியாளர், நீதிபதி நஞ்வா சே மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பிற்பகல் 3.55 மணியளவில் சுங்கை பட்டாணி, பாயு நாஹு 2, அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் கீழ் தளத்தில் 36 வயது நஸ்ரி அப்துல்லா என்பவரைப் பாராங்கினால் தாக்கி கடும் காயங்களை விளைவித்ததாக சூர்யவர்மன் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








