Dec 2, 2025
Thisaigal NewsYouTube
230 கோடி ஊழலுக்கு வித்திட்ட அந்த முன்னாள் மூத்த அமைச்சர் யார்?
தற்போதைய செய்திகள்

230 கோடி ஊழலுக்கு வித்திட்ட அந்த முன்னாள் மூத்த அமைச்சர் யார்?

Share:

டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட ஒரு தொழில் அதிபருடன் சேர்ந்து 230 கோடி வெள்ளி ஊழல் புரிந்ததுடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணமான அந்த முன்னாள் மூத்த அமைச்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அந்த முன்னாள் அமைச்சரையும், டான்ஸ்ரீ அந்தஸ்தை கொண்ட தொழில் அதிபரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். தற்போது விசாரணை செய்து வரும் வேளையில் நாட்டின் வளங்களைச் சூறையாடிய அந்த இரு நபர்களை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு சொந்தமான 230 கோடி வெள்ளியைச் சட்டவிரோதமாக கடத்தி, வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பில் அந்த முன்னாள் அமைச்சரின் பெயரை, வெளிநாடுகளில் சொத்துகளை சட்டவிரோதமாக குவிக்கும் நபர்களை அம்பலப்படுத்தும் பண்டோரா பேபர்ஸ் அண்மையில் வெளிச்சம் போட்டு காட்டியது.

1997 ஆம் ஆண்டில் ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு அந்த முன்னாள் அமைச்சரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது. துன் மகாதீர் முகமது பிரதமராக இருந்த போது அவருடன் கூட்டாக இணைந்து வேலை செய்ததவர்தான் அந்த முன்னாள் அமைச்சர் என்று மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

Related News