May 22, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் வாங்கும் ஆசை நிறைவேறவில்லை, வெ. 179,000 இழப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் வாங்கும் ஆசை நிறைவேறவில்லை, வெ. 179,000 இழப்பு

Share:

முகநூல் அகப்பக்கத்தில் மலிவான விலையில் விருப்பமான பதிவு எண்ணை கொண்ட Honda 110CC ரக மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் விளம்பரம் ஒன்றில் வியாபாரி ஒருவர் 179,000 வெள்ளிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட 49 வயது அந்த ஆடவர் 7 மோட்டார் சைக்கிள்கள் வாங்குவது குறித்து செலுத்தியிருந்த அப்பணமும் மோட்டார் சைக்கிள்களும் கிடைக்கப் பெறாததைக் குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Hatta Che Din தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவர் முகம் தெரியாத நபர் ஒருவருடன் WhatsApp - இல் ஒப்பந்தமிட்டு கடந்த மே 24 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் 7 முறை பணம் செலுத்தியிருப்பதாக Mohd Hatta கூறினார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் விளம்பரங்களை பொதுமக்கள் எளிதில் நம்பக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News