Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய வீரர்கள் காயம், விசாரணை நடைபெறுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய வீரர்கள் காயம், விசாரணை நடைபெறுகிறது

கோலாலம்பூர், நவ.8-


லெபனானில் சைடா அரங்கில் லெபனான் ஆயுதப்படை சோதனை சாவடி மையத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில்
மல்பாட் எனப்படும் மலேசிய பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் காயம் அடைந்தது தொடர்பில் லெபனானில் உள்ள ஐநா. இடைக்காலப் படையான யுனிஃபில் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் மலேசியப் படையைச் சேர்ந்த அறுவரில் ஐவர் சொற்ப காயங்களக்கு ஆளானதுடன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மலேசிய ஆயுதப்படை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென் லெபனானில் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் லெபனானில் உள்ள ஐநா. இடைக்காலப் படையில் மலேசிய வீரர்களின் நிலை குறித்து அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →