Sep 28, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் முதலீடுகள் பொருளாதார மதிப்பை உருவாக்க வேண்டும்- கோபிந்த் சிங்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் முதலீடுகள் பொருளாதார மதிப்பை உருவாக்க வேண்டும்- கோபிந்த் சிங்

Share:

செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் உட்கட்டமைப்புக்கான முதலீடுகள், மலேசிய நிறுவனங்களின் வளர்ச்சி, உயர்மதிப்பு வேலை வாய்ப்புகள் மற்றும் உள்நாட்டு புத்தாக்கங்களுக்கு வழிவகுக்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

இலக்கவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பதுடன் நின்றுவிடாமல், அவற்றை நாட்டின் பொருளாதார மதிப்பாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற எம்டிஎக்ஸ் ஃபோரம் 2026 நிகழ்வில் சுமார் 300 முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநில நிறுவனங்கள் மற்றும் மலேசிய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மலேசியா டிஜிட்டல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 4,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புகள் அவற்றின் செயல்திறன் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதுடன் தொடர்புபடுத்தப்படுகிறதா என்று செய்தியாளர் சந்திப்பின்போது நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோபிந்த் சிங் டியோ, எம்டிஇசி (MDEC) நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் இலக்குகளை மதிப்பீடு செய்யும் நடைமுறைகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இத்தகைய மதிப்பீடுகளின் அடிப்படையில், நிலைமையை அவ்வப்போது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து எம்டிஇசி தன்னிடம் அறிக்கை அளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Related News