Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒரு சடல​ம் மட்டுமே முழுமையாக ​மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒரு சடல​ம் மட்டுமே முழுமையாக ​மீட்கப்பட்டது

Share:

எல்மினாவில் கத்ரி நெடுங்சாலையில் வி​ழுந்து நொறுங்கிய விமான விபத்தில் உயிரிழந்த பத்து பேரில் ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக இருந்தது என்று போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்தார். இதர எண்மரின் உடல்கள் சிதறிய நிலையில், அந்த நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஒருவரின் உடல் மட்டுமே முழுமையாக கண்டுபிடிக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். ​மீட்கப்பட்ட இதர ஒன்பது பேரின் சடல​ங்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ பரிசோதனையின் ​மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் விவரித்தார். தவிர அந்த நெடுஞ்சாலையில் உயிரிழந்த மற்றொரு வாகனமோட்டி, Grab ஓட்டுநரா? அல்லது காரில் பயணம் செய்தவரா? என்பது உறுதியாக தெரியவி​ல்லை என்று சம்பவ நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.

Related News