நாட்டில் கோவிட் 19 சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் XBB.1.16 அல்லது அர்க்ட்ருஸ் எனும் புதிய வகை வைரஸ் பரவி கொண்டு வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவது நலம் என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா பரிந்துரை செய்துள்ளார்.
மே மாதம் இரண்டாம் நாள் , பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சு பள்ளிக்கூடங்களுக்கான எஸ்.ஓ.பி எனப்படும் புதிய நடைமுறை செயல் திட்டத்தை அறிவிக்கும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கோவிட் 19 நோய் பரவும் சம்பவங்கள் பள்ளிக்கூட்டங்களில் அதிகமாக நிகழ்ந்து வருவதால அமைச்சர் இந்தப் புதிய செயல்முறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.








