Sep 30, 2026
Thisaigal NewsYouTube
வேப் புகைக்கச் செய்து 18 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
தற்போதைய செய்திகள்

வேப் புகைக்கச் செய்து 18 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

Share:

பெட்டாலிங் பகுதியில், ஆடவர் ஒருவர் கொடுத்த வேப் எனப்படும் மின் சிகரெட்டைப் புகைத்த பின்னர், மயக்கமடைந்த 18 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வீடு ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வேப்பைப் புகைத்த பின்னர் மயக்கமடைந்ததாகவும், காலை 7 மணியளவில் சுயநினைவு திரும்பிய போது தான் ஆடையின்றி இருந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், பிறப்புறுப்பு பகுதியில் வலி ஏற்பட்டதால், தன்னை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரிக்ஃபில்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹோ சாங் ஹூக் கூறுகையில், சந்தேக நபரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக்கு அவரை அடையாளம் காண முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News