Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கேஎல்ஐஏ சம்பவம்: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநரிடம் போலீஸ் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேஎல்ஐஏ சம்பவம்: ஏகேபிஎஸ் தலைமை இயக்குநரிடம் போலீஸ் விசாரணை

ஏகேபிஎஸ் எனப்படும் மலேசிய எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு ஏஜென்சியின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையின், கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருவரை பகிரங்கமாகக் கண்டித்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

விசாரணைக்குத் தேவையான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், விசாரணை முடிந்ததும் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றார்.

கடந்த வாரம் கேஎல்ஐஏ விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் முஹமட் ஷுஹைலி இருவரைக் கண்டிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பின்னர், தம்மையும் தமது குழுவினரையும் அவர்கள் படம் பிடித்ததாகவும், அப்போது வெளிநாட்டு இடைத் தரகர் ஒருவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததாகவும் அவர் விளக்கமளித்திருந்தார்.

விசாரணை முடிவடைந்ததும், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவ்விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →