தங்காக், டிசம்பர்.24-
ஆடவர் ஒருவர் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் சாலையோரத்தில் பிணமாக கிடந்தது இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோகூர், தங்காக், புக்கிட் செராம்பாங் சாலையோரத்தில் அந்த நபரின் உடல் கிடந்தது. இது தொடர்பாக காலை 8.30 மணியளவில் MERS 999 அவசர அழைப்பு ஒன்றைப் பெற்றதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் Jemellukamal Abdul Halim தெரிவித்தார்.
அந்நிய நாட்டவர் என்று நம்பப்படும் அந்த நபரிடம் எந்தவோர் ஆவணமும் காணப்படவில்லை. தலை, கழுத்து முதலிய பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட அந்த நபரின் உடல், சவப் பரிசோதனக்காக மலாக்கா மருத்துவமனை சவக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக Jemellukamal கூறினார்.








