ஜோகூர் பாரு, அக்டோபர்.14-
சிங்கப்பூருக்குள் நுழையும் இரண்டு சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு அனுமதிக்கான QR குறியீட்டு சோதனை ஓட்டம் நாளை அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கான இரண்டு வழிகளிலும் இந்த QR குறியீட்டு முறை நாளை முதல் அமலுக்கு வருகின்றது.
சுல்தான் அபு பாக்கார் காம்ப்ளெக்ஸ் மற்றும் சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் ஆகியவற்றில் இம்முயற்சி MyNIISe என்ற செயலி மூலமாக நடைபெறவுள்ளது.
MyNIISe பயன்பாடானது கடந்த செப்டம்பர் 22 தேதி, இந்த இரு சோதனைச் சாவடிகளிலும், கார்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் வெற்றியையடுத்து தற்போது, மோட்டாருக்கும், பாதசாரிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.








