ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.17-
ஜோகூர் பாரு நகராட்சி மன்றத்தின் அதிகாரிகளின் நடவடிக்கையால் கோபமடைந்த ஆடவர் ஒருவர், அந்த நகராட்சிக்குச் சொந்தமான லாரியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜோகூர் பாரு நகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நடந்ததது. சம்பவம் நடந்த போது பதிவான கண்காணிப்புக் கேமரா சிசிடிவி காட்சியில், 31 வயதுடைய அந்த ஆடவர் லாரியை எரிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது என ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் ரவுப் செலாமாட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் சுமார் பத்தாயிரம் ரிங்கிட் வரை நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயல் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட ஆடவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.








