Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் புகாரைக் கண்டு பயப்படப் போவதில்லை
தற்போதைய செய்திகள்

போலீஸ் புகாரைக் கண்டு பயப்படப் போவதில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.15-

போலீசாரின் உத்தரவையும் மீறி, தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி,தமக்கு எதிராக ஜசெகவினர் இளைஞர் பிரிவு அளிக்கக்கூடிய போலீஸ் புகார்களைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இன்று சவால் விடுத்துள்ளார்.

தமக்கு எதிராக அளிக்கப்படும் ஒவ்வொரு போலீஸ் புகார் தொடர்பான விசாரணைக்குப் போலீஸ் துறைக்கு ஒத்துழைப்பு நல்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் கடைக்காரர் ஒருவர், தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டி விட்டார் என்பதற்காக அவரின் கடையின் முன் நேற்று மாலையில் சுமார் 200 பேருக்கு தலைமையேற்று, ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்ட அக்மாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜசெக இளைஞர் பிரிவு போலீஸ் புகார் செய்யப் போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்து இருநதார்.

கெப்பாளா பாத்தாஸில் ஒன்று கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்த போலீசாரின் எச்சரிக்கையை மீறியது மூலம் அக்மால் நாட்டின் சட்டத்தை மதிக்கத் தவறிவிட்டதாக அந்தோணி லோக் தெரிவித்து இருந்தார்.

எனினும் ஜசெகவினரின் போலீஸ் புகார்களைக் கண்டு தாம் அஞ்சி நடுங்கப் போவதில்லை என்று தனக்கே உரிய ஆணவத்துடன் அக்மால் இன்று சவால் விடுத்துள்ளார்.

Related News