Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்
தற்போதைய செய்திகள்

பினாங்கு தைப்பூசம் கொண்டாட்டம்: 8 புகார்கள் பதிவு – போலீஸ் தலைவர் தகவல்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.04-

பினாங்கு மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற தைப்பூச திருவிழாவின் போது, பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 8 போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இரண்டு வன்முறைக் குற்றங்கள் மற்றும் இரண்டு சொத்து தொடர்பான குற்றங்களுக்காக நான்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அஸிஸி, விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரண்டு உள்ளூர் ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றபடி, 2026 தைப்பூச கொண்டாட்டமானது திட்டமிட்டபடி, சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்றதாக அஸிஸி குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய ராயல் மலேசியா போலீஸ் படையின், பினாங்கு பிரிவு சார்பில், 1,280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News