இன்று கொண்டாடப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆரிசியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கான புதிய 10 உதவிகளைக் கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இந்த புதிய திட்டம், ஆசிரியர்களின் நலனை வலுப்படுத்தவும், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கவும், தேசியப் பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு அறிவித்துள்ள குறைந்த விலையிலான ஆசிரியர் விடுமுறை திட்டத்தின் மூலம், மனதை தளர்த்துவதற்கான வாய்ப்புகளை அது வழங்குவதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, ஏர் ஏசியா விமான நிறுவனம், டிரேவல்லோக்கா மற்றும் பேங்க் ரக்யாட் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, விமான டிக்கெட்டுகள், தங்குமிடம், தரைவழி போக்குவரத்து மற்றும் தீம் பார்க் ஆகியவற்றிக்கு தள்ளுபடிகள் ஆசியர்களுக்கு வழங்கப்படுவதாக ஃபட்லினா சிடெக் விவரித்தார்.
இன்று மலாக்கா, அனைத்துலக வாணிப மையத்தின் அரங்கில், 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான ஆசிரியர் தினம் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தப் பின்னர், ஃபட்லினா சிடெக் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


