Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும்

நவ. 29-

கிளாந்தான், திரங்கானு, பேரா, பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜோர்கூ ஆகிய எட்டு மாநிலங்களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அம்மையம் வெளியிடப்பட்ட அறிக்கையில், பேராவின் உலு பேரா, கிளாந்தானின் குவா முசாங், பகாங்கின்(ஜெரன்ட்டுட், மாரான், குவாந்தான், பெக்கான் ரோம்பின் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களோடு பேரா மாநிலத்தின் கிரியான், லாரட், மத்தாங், செலாமா, கோலா காங்கசர், கிந்தா, காம்பார் ஆகிய மாவட்டங்களிலும், கேமரான் மலை, LIPIS, RAUB, BENTONG, TEMERLOH, BERA, ஜோகூரின் SEGAMAT, MERSING, KOTA TINGGI ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் MET MALAYSIA கணித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →