கோலாலம்பூர், நவம்பர்.03-
மலேசியாவில் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் குறைவான மின்சார வாகனங்கள் அறிமுகமாகியுள்ளதால் மலிவு விலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய பசுமை இயக்கத்தில் புதிய யுகம் தொடங்கியுள்ளது.
இந்த முன்னேற்றம் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்த வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை விரிவாக்கியுள்ளது. நாட்டை நிலையான தொழில்நுட்பத்தை நோக்கி விரைவாக மாற்றுகிறது.
உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களால் தொடங்கப்பட்ட நேர்மறையான முன்னெடுப்பு மலேசியாவில் மலிவு விலை மின்சார வாகனங்களின் யுகத்திற்கு ஓர் உந்தும் சக்தியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.








