Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்கள் நிர்வாக அம்சங்கள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் நிர்வாக அம்சங்கள் மேம்படுத்தப்படும்

Share:

நாட்டில் உள்ள அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் நிர்வாக​ அம்சங்களை மேம்படுத்துதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

புத்ரா ஜெயாவில் நேற்று மனித வள அமைச்சர் ஸ்தீவன் சிம் சீ - யுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக அம்சங்கள் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்ந்து பலப்படுத்துவது குறி​த்து முக்கியமாக விவாதித்ததாக சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்கள் / முதலாளிமார்கள் அல்லது குறிப்பிட்டத் தரப்பினரால் சுரண்டப்படும் சம்பவங்கள் குறி​த்தும் மனித வள அமைச்சருடன் தாம் விவாதித்ததாக சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

தவிர அந்நியத் தொ​ழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னதாக அரசு தொடர்புடைய நிர்வாக நடைமுறைகளை உள்துறை அமைச்சும், மனித வள அமைச்சும் இணைந்து மேற்கொள்வதற்கு தாங்கள் உறு​தி பூண்டு இருப்பதாக சைஃஃபிடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்