Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பெண் வாகனமோட்டியைத் தாக்கிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பெண் வாகனமோட்டியைத் தாக்கிய ஆடவர் கைது

Share:

தனது காரை முந்திச் செல்ல முயற்சிக்கிறார் என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர், தனது காரை நிறுத்திவிட்டு, தன்னை பின்தொடர்ந்து வந்த பெண் வாகனமோட்டியை நெற்றியிலேயே அடித்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய அந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேமரன் மலையிலிருந்து தாப்பாவை நோக்கி வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது தனது சகோதரரனுடன் காரை செலுத்திய அந்தப் பெண் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சிலாங்கூர் செர்டாங்கில் தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றிய அந்த ஆடவரை கைது செய்த செர்டாங் போலீசார், பின்னர் தாப்பா மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாணைக்கு ஏதுவாக அந்த நபர் இன்று புதன்கிழமை தாப்பா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுன் 9 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றனர்.

முன்னதாக, அந்த பெண்ணின் கார் கண்ணாடியைத் தட்டி அந்த ஆடவர் புரிந்த அடாவடித்தனம் குறித்து பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Related News