போலீஸ்காரர் ஒருவரின் முகத்தில் குத்திய குற்றத்தை மெக்கானிக் ஒருவர் ஜோகூர், பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
மாஜிஸ்திரேட் ஃபத்தின் டலிலா காலிட் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 50 வயதுடைய பட்ரோல் ஹிஷாம் கானி என்ற அந்த மெக்கானிக், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பத்து பாஹாட், சுங்ஙை அபோங், ஜாலான் சென்டெராவாசி என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 1,800 வெள்ளி அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஃபத்தின் டலிலா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








