இந்தியாவின் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும்படியாகும். 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு இந்தியாவின் மத்திய வங்கி நிர்ணயித்துள்ள கால அவகாசம் முடிவடைதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுக்களை உடனடியாக மாற்றிக்கொள்ளும்படி நாட்டின் முன்னணி பயண நிறுவனமான கேபிஎஸ் ட்ரேவல்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கே.பி.சாமி அறிவுறுத்தினார். இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மலேசியர்கள், பயணத்திற்கு பிறகு 2 ஆயிரம் வெள்ளி நோட்டுகளை தங்கள் கைவசம் வைத்திருப்பார்களேயானால் அவை, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து வெற்று காகிதமாக மாறுவதற்குள், செல்லத்தக்க நோட்டாக மாற்றிக்கொள்வதற்கு உரிய ஆலோசனைகளை பெற தங்களின் கேபிஎஸ் ட்ரேவல்ஸ் நிறுவனத்தை நாடலாம் என்றும்கே.பி.சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.







