Oct 16, 2026
Thisaigal NewsYouTube

2,207 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2,207 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், டிச. 19-


இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரையில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,207 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மலேசியர்கள் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட போதிலும் மலேசியர்கள் என்ற முறையில் அவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக வெளியுறவு அமைச்சு சட்ட உதவிகளை வழங்கி வருகிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மலேசியத் தூதரகத்தின் வாயிலாக கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள், மலேசியாவில் உள்ள சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துதல், சம்பந்தப்பட்டவர்களை தூதரக அதிகாரிகள் தடுப்புக் காவலில் சென்று சந்திப்பது முதலிய உதவிகளும் நல்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
2,207 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் | Thisaigal News