Nov 20, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தானில் 21 கார் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய தம்பதி கைது
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் 21 கார் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய தம்பதி கைது

Share:

கோத்தா பாரு, நவம்பர்.20-

கிளந்தானில் கடந்த ஒராண்டாக காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருக்கும் விலையுயர்ந்த பொருட்களைத் திருடி வந்த தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை Jalan Wakaf Mek Zainab-இல் அமைந்துள்ள பேரங்காடி ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார் ஒன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முயன்ற போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஒராண்டாக 1 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களிடமிருந்து செல்போன், மடிக்கணினி, ஏடிஎம் அட்டைகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரையும், 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதோடு, இந்த வழக்கானது தண்டனைச் சட்டம் பிரிவு 379-இன் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.

Related News