சுங்கை பூலோ, ஆகஸ்ட்.24-
சுபாங், கம்போங் பாருவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், 47 வயதுடைய ஒருவர் தனது 52 வயது காதலியைக் கொலை செய்ததாகக் கூறி, காவல் படையிடம் சரணடைந்தார் என சுங்கை பூலோ மாவட்டக் காவல் படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.
தனது காதலியின் கட்டுப்பாட்டால் மன உளைச்சலுக்கு ஆளானதால் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் படையினர், அங்கே மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதிச் செய்யப்பட்டது.








