Jul 30, 2026
Thisaigal NewsYouTube
Nenggiri இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் DAP ஈடுபடுவது பொருத்தமற்றது
தற்போதைய செய்திகள்

Nenggiri இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் DAP ஈடுபடுவது பொருத்தமற்றது

Share:

கிளந்தான்,ஜூலை 27-

கிளந்தானில், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Nenggiri சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் DAP பிரச்சாரத்தில் ஈடுபடுவது பொருத்தமற்றது என்று அம்னோ மூத்த உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் Datuk Mustapha Yaakub தெரிவித்துள்ளார்.

Nenggiri சட்டமன்றத் தொகுதியில் DAP களமிறங்குவது அத்தொகுதியில் உள்ள பெரும்பான்மையான மலாய்க்கார வாக்காளர்களைக் குழப்பக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் அம்னோவிற்கு ஆதரவாக DAP களம் இறங்கி பிரச்சாரம் செய்வதை மதிக்கிறோம். ஆனால், அவர்களின் வரவு நிலைமையை மோசமாக்கி விடும். அந்த சட்டமன்றத் தொகுதியில் சீனக் கிராமங்கள் எதுவும் இல்லாததால் DAP பிரச்சாரத்தில் ஈடுபடுவது தேவையற்றதாகவே கருதப்படுகிறது என்று அந்த மூத்த அரசியல்வாதி தெளிவுபடுத்தினார்.

எனினும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு DAP-க்கு பாரிசான் நேஷனல் தடை விதித்து இருப்பதாக கூறப்படுவதை அவர் வன்மையாக மறுத்துள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை