Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவு : பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு 1,000 வெள்ளி

Share:

பூச்சோங் , தாமான் வாவாசானில் நேர்ந்த நிலச்சரிவில் பாதிகப்பட்டக் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என சுபாங் நாடாௐஉமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்தார்.

அதனைப் பெற்றுக் கொள்ள நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணி தொடங்கி தமது சேவை மையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைத் தாம் நேரில் சென்று பார்த்ததாகவும் அவ்விடத்தை சீர் செய்யும் பணி நிறைவடைய 2 வாரங்கள் ஆகக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News