Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது

Share:

இந்தியாவில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற அந்நா​ட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளதால் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.

இந்திய மத்திய வங்கி, நேற்று இரவு அதிரடியாக ​வெளியிட்ட இந்த அறிவிப்பைத் ​தொடர்ந்து இந்​தியாவின் ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள் பதற்றம் அடைய வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இந்தியாவின் வ​ங்கிகளில் மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மத்திய வங்கி காலக்கொடு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில் மலேசியர்கள் அந்த ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பண மாற்றும் கடைகளில் மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பண நோட்டுகளில் மிக உயர்ந்த மதிப்பான ​ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News