Aug 12, 2026
Thisaigal NewsYouTube
எனக்கு அமைச்சரவைப் பதவியா? மறுத்தார் கைரி ஜமாலுடின்
தற்போதைய செய்திகள்

எனக்கு அமைச்சரவைப் பதவியா? மறுத்தார் கைரி ஜமாலுடின்

Share:

கோலாலம்பூர், மே.30-

அமைச்சரவையில் மீண்டும் தாம் இணையப் போவதாகக் கூறப்பட்டு வரும் தகவலை அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் மறுத்துள்ளார்.

தற்போது தாம் செய்து கொண்டுள்ள வேலையிலே மனநிறைவு என்றும் சில வியாபாரங்களில் தாம் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாகவும் கைரி குறிப்பிட்டார்.

தற்போது தாம் சார்ந்துள்ள துறையில் எவ்வாறு முன்னேறுவது மற்றும் அடுத்தக்கட்ட நிலைக்குப் போவது என்பது குறித்து அதிகமாகச் சிந்தித்து வருவதாக கைரி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தாம் செய்து வருகின்ற வேலையில் மனநிறைவு கிடைப்பதாகவும், பரபரப்பின்றி, விரும்பிய வேலையைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News