Mar 15, 2026
Thisaigal NewsYouTube
1MDB ஆவணப்படத்திற்குத் தடை கோரும் நஜிப்
தற்போதைய செய்திகள்

1MDB ஆவணப்படத்திற்குத் தடை கோரும் நஜிப்

Share:

1MDB வழக்கு தொடர்பான Man On The Run எனும் ஆவணப்படத்தை NETFLIXஇல் ஒளிபரப்பப்படுவதைத் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என நஜிப் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார்., கடுமையான நடவடிக்கையை அந்த ஒளிபரப்பு நிறுவனத்தின் மீது எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

1MDB தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ஒளிபரப்பப்படும் அந்த ஆவணப்படம் வழக்கு விசாரணையை அவமதிப்பது போல் உள்ளது. அதே சமயம், அந்த ஆவணப்படத்திற்காக பேட்டி எடுக்கப்பட்ட முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் மற்றும் சரவாக் ரிப்போர்ட் நோற்றுநர் Clare Rewcastle-Brown ஆகியோர் மீது நிதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் அவதூறு தொடர்பாகவும் வழக்கு தொடர இருப்பதாக நஜிப்பின் வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

Man on the Run ஆவணப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் Cassius Michael Kim. அது கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி முதல் ஒளிபரப்பத் தொடங்கியது.

அந்த ஆவணப்படத்தில் நஜிப்பை அவமதிக்கும் வகையில் பல கூற்றுகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஷாஃபி கேட்டுக் கொன்டார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு வ்ழக்கறிஞராக ஆஜராகும் அஹ்மாட் அக்ராம் காரிப் அந்த ஆவணப்படத்தைப் பார்த்து, தற்போதைய அட்டர்னி ஜெனரலுடனும், தொடர்பு அமைச்சு, பல்லூடக அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியோருடன் கலந்து பேசி அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஷஃபியின் கோரிக்கைக்கு உடன்பட்டு அந்த ஆவணப்படத்தைப் பார்க்க ஒப்புக் கொண்டார் அக்ராம்.

அந்தத் திரைப்படத்தை அக்ராமுக்கு நிச்சயம் அதிர்ச்சி காத்திருப்பதாகவும் ஷஃபி குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்