Jul 29, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிலைநிறுத்தப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜுலை 10-

பெர்சாத்து கட்சியின் உறுப்பினர்களாக இருந்து விலகிய 6 எம்.பி.க்களின் இருக்கைகளை காலி செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் முடிவு செய்துள்ளதாக பெர்சாத்து தலைவரும், பெரிகாத்தான் நேஷனல் தலைவருமான முகைதின் யாசின் உறுதிப்படுத்தியுள்ளார்.

சபாநாயகரின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார். இது கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டன் 49A பிரிவு 3-க்கு எதிராக உள்ளது என்று முன்னாள் பிரதமருமான அவர் தெரிவித்தார்.

ஒரு மேலோட்டமான சாக்கு மற்றும் தவறான விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகரின் முடிவு அமைந்துள்ளது என்றும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தவும் பாதுகாப்பதாகவும் அவர் சத்தியம் செய்த போதிலும் இதன் வழி கூட்டாட்சி அரசியலமைப்பை களங்கப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஒருவர் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் இனி அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இல்லாவிட்டால் எம்.பி.க்களின் இடங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று சட்ட விதி கூறுகிறது.

பெர்சாத்துவின் அரசியலமைப்பின் விதிகளைப் பின்பற்றி, ஆறு எம்.பி.க்களும் பெர்சாத்துவின் உறுப்பினர்களாக இல்லை என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார்.

சபாநாயகர் ஜொஹாரியின் முடிவு சட்ட விதிகளுக்கு எதிராகவும், சபாநாயகராக அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பதாக முகைதீ ன் கூறினார்.

கூட்டாட்சி அரசியலமைப்பை விளக்குவதற்கு நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், எதிர்க்கட்சி எம்.பி.க்களில் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக நாளை காலை நாடாளுமன்றத்தில் ஒரு முன்மொழிவு தாக்கல் செய்யப்பஉம் என்று முகைதீன் கூறினார்!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்