Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா - புருணை சிறப்பு உறவு: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் உறுதி
தற்போதைய செய்திகள்

மலேசியா - புருணை சிறப்பு உறவு: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் உறுதி

Share:

மலேசியா மற்றும் புருணை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் மீண்டும் உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புருணை சுல்தான் ஹாசனல் போல்கியாவுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகுப் பேசிய பிரதமர், இந்த உறவு வெறும் ராஜதந்திர ரீதியானது மட்டுமல்ல, இது ஒரு சகோதரத்துவப் பிணைப்பு என்றார்.

நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தச் சிறப்பு உறவு, பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளுக்கும் பக்கபலமாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ பெருமிதம் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிபொருள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். இரு நாடுகளின் மக்களின் நலனைப் பாதுகாக்கவும், அமைதியான எதிர்காலத்தை உருவாக்கவும் தொடர்ந்து இணைந்து பாடுபட இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

Related News