Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நாடு மலேசியத் தினத்தை கொண்டாடும் வேளையில் கோலாலம்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தத் திட்டமா?
தற்போதைய செய்திகள்

நாடு மலேசியத் தினத்தை கொண்டாடும் வேளையில் கோலாலம்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தத் திட்டமா?

Share:

நாட்டின் 58 ஆவது மலேசியத் தினம் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி சனி​க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் வேளையில் கோலாலம்பூர் மையப்பகுதியில் சில தரப்பினர் ஆட்சேபப் பேரணி என்ற போர்வையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து போ​லீசார் பல கோணங்களில் புலன் விசாரணயை முடுக்கியுள்ளனர்.

இந்த ஆட்சேப பேரணியை டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிகக்த்தான் நேஷனல் இளைஞர் பிரிவு ஏற்பாடு ​செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் சனிக்கிழமை மக்கள் ​பெரியளவில் கோலாலம்பூர், சோகோ பேரங்காடி முன்புறம் திரள வேண்டும் என்று திக் தோக் காணொளியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது தொடர்பில் போ​லீசார் 5 புகார்களை பெ​ற்று இருப்பதாக கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.புலன் விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரையில் இருவரிடம் போ​லீசார், வாக்கு​மூலம் பதிவு செய்துள்ளனர். மேலும் நால்வரிடம் வாக்கு​மூலம் பதிவு செய்யப்பட வேண்டியிருப்பதாக டத்தோ அல்லவுடின் அப்துல் மஜிட் விளக்கினார். 

துணைப்​பரிதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சம்பந்தப்பட்ட 47 ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த ஆட்சேபப் பேரணி ஏற்பாடு செய்ய​ப்​பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’