Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா, இஸ்ரேலியர்களுக்குத் தடை: அமெரிக்க மிரட்டலுக்கு அன்வார் இப்ராஹிம் பதிலடி
தற்போதைய செய்திகள்

மலேசியா, இஸ்ரேலியர்களுக்குத் தடை: அமெரிக்க மிரட்டலுக்கு அன்வார் இப்ராஹிம் பதிலடி

Share:

இஸ்ரேலிய குடிமக்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மாற்றிக்கொள்ளுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த மிரட்டலுக்கு மலேசியா பணியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மலேசியா பல தசாப்தங்களாகப் பின்பற்றி வரும் இந்த இறையாண்மைமிக்க வெளியுறவுக் கொள்கை அனைத்துலக விதிகளுக்கு எதிரானது அல்ல. பாலஸ்தீன மற்றும் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தொடர் படுகொலைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இஸ்ரேலிய குடிமக்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது யூதர்களுக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியாவின் ஃபாரஸ்ட் சிட்டி பகுதியில் இரட்டை குடியுரிமையுடன் வசித்து வரும் இஸ்ரேலியர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இந்த விவகாரத்தால் அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படாது. மலேசியா எப்போதும் அமெரிக்க முதலீட்டாளர்களையும் குடிமக்களையும் வரவேற்கிறது என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி