Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பூமிபுத்ராக்களுக்கு வீட்டு சிறப்பு சலுகை தொடர்ந்து தேவை
தற்போதைய செய்திகள்

பூமிபுத்ராக்களுக்கு வீட்டு சிறப்பு சலுகை தொடர்ந்து தேவை

Share:

புத்ராஜெயா, மார்ச் 2 -

நாட்டில் மலிவு விலை வீடுகள் மற்றும் வாங்கத் தக்க விலை கட்டுப்படி வீடுகளை வாங்குதற்கு குறைந்த வருமானம் கொண்ட பூமிபுத்ரா சமூகத்திற்கு வீட்டின் விலையில் சிறப்பு தள்ளுபடி வழங்கும் நடைமுறை இன்னமும் தேவைப்படுவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சிறப்பு சலுகை, பணக்காரக்ளுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்க இயலாது. குறைந்த வருமானம் பெறுகின்ற பூமிபுத்ரா சமூகத்திற்கு வீட்டின் விலையில் சிறப்பு தள்ளுபடி வழங்கும் அரசாங்கத்தின் நடைமுறை தொடரும் என்று இன்று பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றுகையில் அம்னோ தலைருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News