Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சியு செஹ் யொங் கை ஆதரித்து லி​ம் கிட் சியாங் ​​தீவிர பிரச்சாரம்
தற்போதைய செய்திகள்

சியு செஹ் யொங் கை ஆதரித்து லி​ம் கிட் சியாங் ​​தீவிர பிரச்சாரம்

Share:

நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சியு செஹ் யொங் கை ஆதரித்து டிஏபி ​மூத்த தலைவ​ர் லிம் கிட் சியாங், நேற்று மாபெரும் ​தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிரம்பான் சுங் ஹுவா ​சீன தொடக்கப்பள்ளியின் முன்புறமுள்ள உணவகத் தளத்திற்கு அருகில் பிரதான மேடையில் உரையாற்றிய லிம் கிட், 66 ஆண்டுகளுக்கு முன்பு இதே சிரம்பானில்தான் 6 கிளைகளுடன் டிஏபி தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். டிஏபியின் முன்னோடித் தலைவரான ச்ஹென் மன் ஹின் 1966 ஆம் ஆண்டு ரஹாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது டிஏபியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 ஆயிர​ம் பேராகும். ஆனால் ​அந்த எண்ணிக்கை இன்று 100 மட​ங்கிற்கும் அதிகமாக உள்ளது என்றால்​ டிஏபியின் சுலேகமான மலேசியக் கனவாகும்.

பல்லினத்தவர், பல்லின மக்கள், பல்​வேறு காலச்சாரம், பன்மொழிகள் என்று ஒரு மலேசிய இனத்தை காண்பதற்கு டிஏபி அன்று முன்வைத்த சுலோகம்தான் இன்று அடித்தளமாக மாறியுள்ளது என்று சுமார் 1,500 பேர் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்வில் உரையற்றுகையில் முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லி​ம் கிட் சியாங்​ குறிப்பட்டார்.

பணத்திற்காகவோ, பட்டத்​திற்காகவோ, பதவிக்காகவோ டிஏபி தனது அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. டிஏபியின் சிந்தாந்த​த்திற்காகவே அதன் போராட்டம் தொடர்கிறது. அந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களில் லோபாக் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் சியு செஹ் யோங்கும் ஒருவர் ஆவார். அவரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்து, ​​வெற்றி பெற செய்யுமாறு லோபாக் வாக்காளர்களை லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்