கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.23-
வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுடன் சபா வாரிசான் கட்சி கூட்டு ஒத்துழைப்புக் கொண்டு இருக்காது என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஸிஸ் ஜம்மான் தெரிவித்தார்.
சபா தேர்தலில் டத்தோ ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் தலைமையிலான வாரிசான் கட்சியுடன் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டு அரசியல் ஒத்துழைப்பு கொள்ளும் என்று அதன் முன்னணித் தலைவர்கள் அறிவித்து இருப்பது தொடர்பில் வாரிசான் இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
வரும் தேர்தலில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டு சேராமல் வாரிசான் தனியொரு கட்சியாகப் போட்டியிடுவிருக்கிறது என்று முகமட் அஸிஸ் குறிப்பிட்டார்.








