Jun 30, 2026
Thisaigal NewsYouTube
9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

Share:

'கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரத்தில் ஒரு பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், அந்த நபர் யார் என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆடம் அட்லி வலியுறுத்தியுள்ளார்.

வெறும் மொட்டையான குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், அந்தப் பணத்தைப் பெற்ற நபர் யார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார்.

இத்தகைய ஆதாரமற்ற புகார்கள் PKR கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி என்றும், உண்மையாகவே எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தவறு செய்து இருப்பாரேயானால் கட்சி அதற்குத் துணை போகாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தொழிலதிபர் விக்டர் சின், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்காமல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆடம் அட்லி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தன் மீது சுமத்தப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அமைச்சர் ரஃபிஸி ரம்லி ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்ததுள்ளார்.

அப்படியொன்றால் 9.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்ற அந்த பிகேஆர். நாடாளுமன்ற உறுப்பினர் யார்? ஆதாரத்துடன் அவர் பெயர் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஆடம் அட்லி வலியுறுத்தியுள்ளார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி