Sep 28, 2026
Thisaigal NewsYouTube
 கூலிமில் கோர விபத்து: தொழிற்சாலை தொழில்நுட்பவியலாளர் பலி
தற்போதைய செய்திகள்

கூலிமில் கோர விபத்து: தொழிற்சாலை தொழில்நுட்பவியலாளர் பலி

Share:

கூலிம் - செர்டாங் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், 45 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை 8.30 மணியளவில், கேஎச்திபி 16 (KHTP 16) சாலைச் சந்திப்பில் உள்ள சமிிக்ஞை விளக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி. தெங்கு முகமட் ஃபாய்சால் தெங்கு யேங் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர் தாமான் டேசா இம்பியானைச் சேர்ந்த 45 வயதுடைய சுல் ஹாஷிமி பின் அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வந்தவர்.

இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் , கூலிம் உத்தாமா சாலையிலிருந்து 'ஹோண்டா வாரியோ' ரக மோட்டார் சைக்கிளில் வந்த சுல் ஹாஷிமி, பச்சை நிறச் சமிிக்ஞை விழுந்ததும் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, கூலிம் அவென்யூவிலிருந்து சுங்கை ஊலார் நோக்கி நேர் சாலையில் வந்து கொண்டிருந்த 'பெருடுவா மைவி' கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இரு வாகனங்களும் மிக அருகில் வந்ததால், காரை ஓட்டி வந்தவரால் விபத்தைத் தவிர்க்க முடியாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த சுல் ஹாஷிமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெங்கு முகமட் ஃபாய்சால் தெரிவித்தார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்