Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பில் ஈடுபட்ட வாகனமோட்டிகள், போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

கைகலப்பில் ஈடுபட்ட வாகனமோட்டிகள், போலீஸ் விசாரணை

Share:

நிபோங் திபால், ஜூன்.01-

சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள பினாங்கு, நிபோங் திபால், புக்கிட் தம்பூன் டோல் சாவடியில் இரு வாகனமோட்டிகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக செபராங் பிறை செலாத்தான் போலீஸ் தலைவர் ஜே ஜனவரி சியோவோவ் தெரிவித்தார்.

இந்தக் கைகலப்பு தொடர்பில் போலீசார் இரண்டு வெவ்வேறு புகார்களைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் அந்த இரு வாகனமோட்டிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைகலப்பு தொடர்பில் 28 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News