Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்துடன் மோதி ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்துடன் மோதி ஆடவர் மரணம்

Share:

மோட்டார் சைக்கிளில் சென்ற பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், மணிவாரி இயந்திரத்துடன் மோதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் பேரா, பத்து காஜா, தஞ்சோங் துவாலாங், கம்போங் ஆயெர் பாப்பான், லோரோங் 4 பாக்கார் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

55 வயது அஸ்ரி முஹமாட் பாட்டில் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. நெஞ்சுப்பகுதியில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த முன்னாள் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி முஹமாட் ரோய் சுஹைமி தெரிவித்தார்.

அந்நபர் தஞ்சோங் துவாலாங் - கிலிருந்து கம்போங் காஜா- வில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஏஎஸ்பி முஹமாட் ரோய் குறிப்பிட்டார்.

Related News

மண்வாரி இயந்திரத்துடன் மோதி ஆடவர் மரணம் | Thisaigal News