Dec 23, 2025
Thisaigal NewsYouTube
இ-ஹெய்லிங் பெண் ஓட்டுநர் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணையைத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

இ-ஹெய்லிங் பெண் ஓட்டுநர் கூர்மையான கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணையைத் தொடங்கியது

Share:

சிப்பாங், டிசம்பர்.23-

சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் திறந்தவெளி வாகன நிறுத்தும் இடத்தில் இ-ஹெய்லிங் பெண் ஓட்டுநர் ஒருவர், கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய அடுத்த கணமே அவ்விடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பியதாக நம்பப்படும் 60 வயது மதிக்கத்தக்க சந்தேகப் பேர்வழியை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

கொலை முயற்சி குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் இச்சம்பவம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

கழுத்திலும், வலது கரத்திலும் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளான 60 வயது மதிக்கத்தக்க அந்த இ-ஹெய்லிங் பெண் ஓட்டுநர் தற்போது சைபர் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு 11.15 மணியளவில் நீலாய் போலீஸ் தலைமையகம் 69 வயதுடைய ஒரு சந்தேகப் பேர்வழியை அடையாளம் கண்டுள்ளதாக நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், நீலாய், Phase 3, தாமான் டேசா மெலாத்தியில் நிகழ்ந்த விபத்தொன்றில் அந்த சந்தேகப் பேர்வழி சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் புலி நகக்கத்தியை பயன்படுத்தியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக நோர்ஹிஸாம் பஹாமான் குறிப்பிட்டார்.

Related News