Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஜெயாவில் சினிமா பாணி போலீஸ் துரத்தல்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சுபாங் ஜெயாவில் சினிமா பாணி போலீஸ் துரத்தல்: இருவர் கைது

Share:

சுபாங் ஜெயாவில் போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற கார் ஒன்று, விபத்தில் சிக்கியதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 9 மணியளவில் சுபாங் டோல் சாவடி அருகே போலீஸ் சோதனையைத் தவிர்த்து மின்னல் வேகத்தில் சென்ற புரோட்டான் பிரேவ் காரை, போலீஸ் துறையினர் பல வாகனங்களில் துரத்தினர். இந்தத் துரத்தல், சுபாங் ஜெயா, பெர்சியாரான் துஜுவான் சந்திப்பில் ஒரு பிஎம்டபிள்யூ கார் மீது மோதி விபத்தில் முடிந்தது. அவ்வழியாகச் சென்ற அமைச்சர் ஹன்னா யோ இந்தச் சம்பவத்தைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

காரைச் சோதனையிட்டதில் 16 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 35 வயதுள்ள உள்ளூர் ஆடவர் மீது ஏற்கனவே 21 குற்றப் பின்னணிகள் உள்ளன. அவருடன் இருந்த வெளிநாட்டுப் பெண்ணும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News