கோலாலம்பூர், பிப்ரவரி.20-
பிஎல்கேஎன் எனப்படும் தேசிய பயிற்சி சேவைக்கான 3.0 தொடர் இரண்டு 2026 ஆண்டு சேர்க்கைக்கான பயிற்சியாளர்கள், தங்களின் தேர்வு நிலையை இன்று முதல் சரி பார்க்கத் தொடங்கலாம் என்று தேசிய சேவை பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய சேவை பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ePLKN 3.0 (இபிஎல்கேஎன் 3.0) இணையதளத்தின் வழியாக இந்தச் சரி பார்ப்புகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் பயிற்சியாளர்களும், சீரான பதிவு மற்றும் நிர்வாக நடைமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் ePLKN 3.0 அகப்பக்கத்தின் வாயிலாகத் தங்களின் வருகையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த பயிற்சித் தொடர்களுக்கான அறிவிப்புகள் அவ்வப்போது கட்டம் கட்டமாக வெளியிடப்படும் என்றும், இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற ஆர்வமுள்ளவர்கள் தேசிய சேவை பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ ஊடகத் தளங்களைக் கவனித்து வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








